கோட்டை (கொழும்பு)
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய வணிக மாவட்டம்கோட்டை, கொழும்பு இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பின் மத்தியில் உள்ள ஒரு வணிக நகரமாகும். இங்கு கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை, கொழும்பு உலக வர்த்தக மையம் ஆகியனவும், இலங்கை வங்கியின் தலைமையகம், இலங்கை மத்திய வங்கிக் கட்டடங்களும் அமைந்துள்ளன. கோட்டைப் பகுதிக் கடற்கரையோரமாக 1859-இல் பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்ட் என்பவரால் கட்டமைக்கப்பட்ட காலிமுகத் திடலும் அதனை ஒட்டிய கடற்கரையும் அமைந்துள்ளது. இப்பகுதியில் தலைமை அஞ்சலகமும் தங்குவிடுதிகளும், பல அரசுத்துறை அலுவலகங்களும் அமைந்துள்ளன.
Read article